“இந்தியாவை தவறாக சித்தரிக்கும் AI வீடியோக்கள்…” கொதித்தெழுந்த அமெரிக்க பெண்மணி… 2.8 கோடி பார்வைகளைக் கடந்து இணையத்தில் சர்ச்சை…!!

By Devi Ramu on புரட்டாதி 5, 2026

Spread the love

இந்திய நபர் ஒருவர் குப்பைக்கூளங்களுக்கு நடுவே நின்று, தனது வெறும் தொப்பையில் ரொட்டிகளைத் தேய்ப்பது போன்ற அருவருக்கத்தக்க வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் சுமார் 2.8 கோடி பார்வைகளைப் பெற்று வைரலானது. ஆனால், இந்த வீடியோ முற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ என்பதும், இந்தியாவைப் பற்றிய தவறான பிம்பத்தை உலகளவில் பரப்பத் திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்பதும் அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டன் ஃபிஷர் என்ற பெண்மணி, இந்த வீடியோவைப் பார்த்து கொதித்தெழுந்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “யாரும் தங்களது தொப்பையில் ரொட்டி தேய்ப்பதில்லை. இந்தியாவை மிகவும் மோசமாகக் காட்டுவதற்காகவே AI மூலம் இந்த வீடியோவை பிரத்யேகமாக உருவாக்கியுள்ளனர். இந்தியாவைப் பார்க்காத மக்களுக்கு இதுபோன்ற போலி வீடியோக்கள் தவறான எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியா அற்புதமான மனிதர்கள் வாழும் அழகான நாடு” எனத் தெரிவித்துள்ளார்.

   

https://www.instagram.com/reel/DcyUmu_zkC5/?utm_source=ig_web_copy_link&igsi=MzRlODBiNWFlZA==

   

இந்தியாவைப் பற்றிய போலிப் பிரச்சாரத்திற்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுத்த அமெரிக்கப் பெண்ணின் இந்த நேர்மையான பதிவிற்கு, உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நெகிழ்ச்சியுடன் தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.