ஐயோ கடவுளே… கடன் கொடுத்தவர் தொடர்ந்து… பணம் கேட்டு மிரட்டியதால் அதிர்ச்சி… குளத்தில் குதித்து குடும்பத் தலைவர் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பம்…!

By Swetha on புரட்டாதி 5, 2026

Spread the love

மிஸ்ரிகுஞ்ச் பகுதியைச் சேர்ந்த முகமது ரஷித் ரஸ்வி என்பவர், ஜாகீர் என்ற நிதியளிப்பவரிடம் வாங்கிய கடனை முழுமையாகத் திருப்பிக் செலுத்திய நிலையிலும், ஜாகீர் மேலும் ரூ. 5 லட்சம் கேட்டுத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 31 அன்று ரஷித் தன் செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு ஜல்பள்ளி குளத்தில் குதித்தார். காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை மேற்கொண்ட தேடுதலுக்குப் பின், மூன்று நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 3 அன்று அவரது உடல் மீட்கப்பட்டது.

   

https://twitter.com/TheSiasatDaily/status/2095832129909530685/video/1

   

இச்சம்பவம் குறித்து ஷாஹாலி பந்தா காவல் நிலையத்தில் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பகடி ஷெரீப் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உடல் கண்டெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா பிரிவு 194-ன் கீழ் சந்தேகத்திற்கிடமான மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.