பின்னணியில் இருந்து இயக்கும் “அதிமுக/திமுக/முக்கிய” புள்ளி?…. அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் வெடித்த அதிர்ச்சி உண்மை…!

By Nanthini on புரட்டாதி 4, 2026

Spread the love

தவெக தமிழகத்தில் ஆட்சியமைத்து நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் பலர் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜரானது தற்போது அரசியல் களத்தில் மேலும் சூட்டை கிளப்பியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தனது சகோதரர் மரிய குளோத் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. லாஸ்பேட்டை காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் நேரில் ஆஜரானார். வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் பென்டிரைவ் சான்றுகளைப் பெற்றுக்கொண்ட அவர் தரப்பில், வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி எதிர் வாதங்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

   

இந்த வழக்கு விசாரணைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மரிய வில்சனின் வழக்கறிஞர், இதில் தீவிர அரசியல் காழ்ப்புணர்ச்சி மறைந்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். 2022-ல் நடந்த ஒரு குடும்பப் பிரச்சினைக்கு 2026-ல் அவர் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சரான பிறகு திடீரென உயிர்கொடுத்து வழக்கை வேகப்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இதன் பின்னணியில் யாரோ இருந்து அரசியல் ஆதாயத்திற்காக இயக்குவதாகவும் அமைச்சர் உணர்வதாகத் தெரிவித்தார்.

   

குழந்தையை வளர்ப்பது தொடர்பாக குடும்பத்தினரிடையே ஏற்பட்ட சிறு மனக்கசப்பே இந்த வழக்கு என்றும், சமரச நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை முன்வைப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். சட்டப்படி இந்த வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் சந்தித்து வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகக் கூறி பேட்டியை நிறைவு செய்தார்.