அட கொடுமையே… பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில்… நடந்த கத்திக்குத்து தாக்குதல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி… மும்பையில் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 3, 2026

Spread the love

மும்பை காந்திவலி கிழக்கு லோகண்ட்வாலா மகாடா வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 11:33 மணியளவில் விகாஸ் குட்டே என்ற நபர் மீது நடந்த கத்தித் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை ஸ்கூட்டர் அருகில் நின்றுகொண்டிருந்த அவரை, முகம் துணியால் மூடப்பட்டிருந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளார்; இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும், அருகில் பலரும் இருந்தும் யாரும் தடுக்க முன்வரவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை.

   

https://twitter.com/HateDetectors/status/2095463615822504338/video/1

   

இதுகுறித்து சமதா நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்தக் கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய குற்றவாளியைத் தேடும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.