கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘இந்தியன் 2’ மற்றும் ‘தக் லைஃப்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவைச் சந்தித்தன. இதனால் சீனியர் இயக்குநர்களைத் தவிர்த்து, இளம் இயக்குநர்களுடன் கூட்டணி அமைக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.
முன்னதாக சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் இயக்கத்தில் கமல் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தாமதமாகி வரும் நிலையில், தற்போது ‘சித்தா’, ‘சேதுபதி’, ‘வீர தீர சூரன்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிக்க கமல்ஹாசன் கமிட்டாகியுள்ளார்.
இப்புதிய படத்திற்கான முதற்கட்ட டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் பேண்ட், சட்டை அணிந்து கையில் வீச்சு கத்தியுடன் கமல்ஹாசன் மாஸான போஸ் கொடுத்து பங்கேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
