இதெல்லாம் நியாயமா…? “ஹோட்டல் அறையில் ரகசியமாக…” கணவரை கையும், களவுமாக பிடித்த முதல் மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 3, 2026

Spread the love

ஜான்சியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் நிரஞ்சன் என்பவர் பிஎஸ்எஃப் படையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ருச்சி படேல் என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பணி காரணமாக உருவான தலைக்கணத்தால் ஆகாஷ், மனைவியிடம் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமலேயே ஆகாஷ், காசியாபாத்தைச் சேர்ந்த சில்பி வர்மா என்ற பெண்ணை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரும் இந்தூரில் உள்ள ‘கிருஷ்ணா ரெசிடென்சி’ என்ற ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர்.

   

கணவரின் ரகசியத் திருமணம் குறித்துத் தகவல் அறிந்த முதல் மனைவி ருச்சி படேல், உடனடியாகப் போலீசாரை அழைத்துக்கொண்டு அந்த ஹோட்டல் அறைக்குச் சென்று இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தார். “முறைப்படி விவாகரத்து பெறாமல் எப்படி மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து வாழ முடியும்?” என மனைவியும் உறவினர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.