இன்று காலை 10:30 மணி பரபரப்பு…. ஸ்டாலின் தொடுத்த வழக்கு… கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவில் மாற்றம்?…. பரபரப்பின் உச்சத்தில் தமிழகம்….!

By Nanthini on புரட்டாதி 3, 2026

Spread the love

கடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அப்போதைய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பிடித்தார். முடிவுகளுக்குப் பின், ஸ்டாலின் அளித்த கோரிக்கையின் பேரில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டன.

   

இருப்பினும், இந்தச் சரிபார்ப்பு நடவடிக்கையின் போது சில வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென பழுதாகி நின்றதாகவும், 6 வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்களுக்கும் விவிபேட் சீட்டுகளுக்கும் இடையே தீவிர முரண்பாடுகளும் முறைகேடுகளும் கண்டறியப்பட்டதாக திமுக தரப்பு குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதித் தேர்தல் முடிவை எதிர்த்து மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தொடர்ந்தார்.

தனது மனுவில், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் சீட்டுகளையும் முழுமையாகச் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், முறைகேடுகள் நடந்துள்ளதால் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

   

கடந்த வாரம் நடைபெற்ற இறுதி விசாரணையின் போது மு.க.ஸ்டாலின் தரப்பு, தேர்தல் ஆணையம் மற்றும் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தீவிர வாதங்களை முன்வைத்தனர். வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (செப்டம்பர் 3, வியாழக்கிழமை) காலை 10:30 மணிக்குத் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளிக்க உள்ளதால், தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிலவி வருகிறது.