உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குணியால் கிராமத்தில் அமைந்துள்ள மாதா பரணா தேவி கோவிலில் அதிகாலை 4 மணியளவில் ஒரு இளம் நபர் நுழைந்துள்ளார். அவர் கோவிலில் இருந்த மூன்று மணிகள், ஒரு மணிக்கூண்டு, எட்டு அஷ்டதாது சிலைகள், இரண்டு தங்க மூக்குத்திகள் அல்லது கழுத்தணிகள், ஐந்து வெண்கலத் தட்டுகள், ஒரு ஜோடி வெள்ளி நாக சிலைகள் மற்றும் உண்டியலில் சேகரிக்கப்பட்ட தொகை உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றுள்ளார்.
இந்தத் துணிகரத் திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள புனிதப் பொருட்கள் மற்றும் பல மதிப்புமிக்க சிலைகள் ஒரே இரவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
https://twitter.com/askbhupi/status/2095021582293090584/video/1
இதுகுறித்து தகவல் அறிந்த ராஜ்பூர் காவல் நிலைய காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தப்பியோடிய மர்ம நபரைத் தேடும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
