BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை…. காலையிலேயே வெளியான குட் நியூஸ்….!

By Nanthini on புரட்டாதி 2, 2026

Spread the love

தமிழக பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை மற்றும் விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கும் காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. தேர்வுகள் முடிந்த கையோடு, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களின் ஓய்வை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளோ அல்லது கூடுதல் பாடங்களோ நடத்தக் கூடாது என்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசு கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.