அமெரிக்காவில் இந்தியர்கள் வேலைகளைத் திருடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அங்குள்ள நபர் ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார். “உங்களுடைய வேலை திருடப்படவில்லை, மாறாக அவர்களை விட நீங்கள் குறைவாகவே உழைத்துள்ளீர்கள்” என்று அவர் தைரியமாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டினர் எத்தகைய சவால்களையும், விசா கட்டுப்பாடுகளையும் தாண்டி தங்களின் கடின உழைப்பாலும் திறமையாலும் மட்டுமே முன்னுக்கு வருகிறார்கள் என்பதை அவர் அந்த விவாதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
https://www.instagram.com/reel/Dcqp8qVz9Xx/?utm_source=ig_web_button_share_sheet
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்தியர்களின் கடின உழைப்புக்கு இணையான ஒன்றுமில்லை என்ற கருத்தையும் பலரிடையே பரவச் செய்துள்ளது.
