ஐய்யோ… அப்பா… அம்மா எங்கே?… வெள்ள இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்த… 5 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு… பெற்றோரைத் தேடி ஏங்கும் பிஞ்சு மனம்… நெட்டிசென்களை கலங்க வைத்த வீடியோ…!

By Swetha on புரட்டாதி 1, 2026

Spread the love

நேபாளத்தில் ஏற்பட்ட கோரமான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் ஒரு ஐந்து வயதுச் சிறுவன் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்தான். இயற்கையின் இந்தச் சீற்றத்திற்கு நடுவே, உயிரைக் காப்பாற்றப் போராடிய மீட்புப் படையினர் அந்தச் சிறுவனைப் பத்திரமாக மீட்டெடுத்து அவனுக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.

மீட்கப்பட்ட அந்தச் சிறுவன் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாததால், தன் பெற்றோரைப் பற்றியோ அல்லது தனது வீட்டைப் பற்றியோ எந்த ஒரு தகவலையும் அவனால் வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை. அவனது பிஞ்சு முகத்தில் தேங்கிக் கிடக்கும் பயமும் குழப்பமும் பார்ப்பவர்களின் நெஞ்சை நொறுக்கும் விதமாக உள்ளன.

   

இத்தகு துயரமான சூழலில், அவனது அம்மாவும் அப்பாவும் எங்காவது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், விரைவில் அவர்கள் தங்கள் அன்பு மகனுடன் ஒன்றுசேர வேண்டும் என்றும் மனதாரப் பிராத்திப்போம். பேரிடர்களால் பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைய இந்தக் கடினமான வேளையில் அனைவரும் குரல் கொடுப்போம்.