தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு மற்றும் மனைகள் பெற்று, தவணைக் காலம் முடிந்தும் நிலுவைத்தொகை வைத்துள்ள பயனாளிகளுக்கு உதவும் வகையில், ஒரே தவணையில் அசல் தொகையைச் செலுத்துவோருக்கு அபராத வட்டி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை அமைச்சர் ராஜ்குமார் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, வரும் 31.03.2026-க்கு முன்னர் நிலுவையில் உள்ள அடமானம், கட்டுமானம் மற்றும் இதர கடன்களுக்கான அபராத வட்டி மற்றும் EMI வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கடன்களை வசூலிப்பதோடு மட்டுமல்லாமல், கடன்தாரர்களின் பெரும் வட்டி சுமையைக் கணிசமாகக் குறைத்து அவர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் நிவாரணம் அளிப்பதே இந்த முக்கியத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
