ரூ. 24 கோடி கார் ரேஸ்.. பதக்க ஊழல்…. “யார் அப்பா வீட்டு காசு இது?”…. சட்டசபையில் செங்கோட்டையன் போட்ட வெடி…. கதறிய திமுக….!

By Nanthini on ஆவணி 28, 2026

Spread the love

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் திட்டம் குறித்தும், முந்தைய அரசு செலவழித்த நிதி குறித்தும் காரசாரமான விவாதம் எழுந்தது. விசிக எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் விஜய் அறிவித்த இத்திட்டம் குறித்து விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசுகையில், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் கார் வழங்கி என்ன பயன் எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், மக்கள் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவே கார் வழங்கப்படுவதாக தெளிவுபடுத்தினார்.

இவ்விவாதத்தில் உதயநிதி குறுக்கிட்டு, அரசு கஜானா காலியாகிவிட்டது எனக் கூறிவிட்டு கார் வாங்க நிதி எவ்வாறு ஒதுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அவை சூடானது. அப்போது எழுந்த அமைச்சர் செங்கோட்டையன், அரசு வழங்கும் காரில் செல்வதே தனி மரியாதை எனக் கூறியதுடன், திமுக ஆட்சிக்காலத்தில் ₹24 கோடியில் ஃபார்முலா கார் ரேஸ் நடத்தியதைச் சுட்டிக்காட்டி, “அது யார் அப்பா வீட்டுப் பணம்?” என நிதியமைப்பை நோக்கி நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.

   

செங்கோட்டையனின் இந்தத் காரசாரமான கேள்விக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த திமுக மூத்தத் தலைவர் கே.என்.நேரு, விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி உலகத்தரத்தில் அந்தப் போட்டியை நடத்திப் பாராட்டுக்களைப் பெற்றதாகக் குறிப்பிட்டார். மேலும், செங்கோட்டையன் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது பதக்கங்களுக்காக ₹10 கோடி செலவு செய்து, இறுதியில் பதக்கங்களையும் வழங்கவில்லை எனச் சாடிய நேரு, “அது யார் வீட்டுப் பணம்?” எனத் திருப்பிக் கேட்டார்.

   

அப்போதைய சூழலில் குறுக்கிட்ட அமைச்சர் அருண்ராஜ், நிதி நெருக்கடி என்று சொல்லிக்கொண்டே கருணாநிதிக்கு பேனா சிலை அமைக்க நிதி ஒதுக்கியதையும் திமுக அரசிடம் சுட்டிக்காட்டினார். திராவிடக் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியில் நடைபெறும் இந்த விவாதங்கள், முன்னெப்போதையும் விட அவையில் பெரும் சலசலப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.