திமுகவுக்கு அடுத்த ஷாக்… சிக்கலில் சேகர்பாபு.. தவெக அரசின் அடுத்த டார்கெட்…. கசிந்த சீக்ரெட்…. அலறும் அறிவாலயம்….!

By Nanthini on ஆவணி 28, 2026

Spread the love

தேர்தல் வாக்குப்பதிவின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சினோரா அசோக் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அமைச்சர் சேகர்பாபுவிடம் காவல்துறை சுமார் 4 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பும் மாறி மாறி புகார் தெரிவித்துள்ள நிலையில், சினோரா அசோக் அளித்த புகாரின் பேரில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னர் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே, அமைச்சர் சேகர்பாபுவைக் கைது செய்யும் தீவிர முனைப்பில் தவெக அரசு செயல்பட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அரசியல் சூட்டையும் கிளப்பியுள்ளன.