பொங்கலுக்குள் தவெக ஆட்சியை கவிழ்க்க புது திட்டம்… தமிழக அரசியலில் கொளுந்துவிட்டு எரியும் புதிய புயல்…!!

By Swetha on ஆவணி 27, 2026

Spread the love

பொங்கலுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கவிழ்க்கும் சதி நடப்பதாகக் கூறி திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ரகசியக் கூட்டம் நடத்தியதாகப் பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி தமிழக அரசியலில் பெரும் அதிர்லைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் தான் பேசிவிட்டதாகவும், சட்டப்பேரவையில் தைரியமாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருமாறும் மூத்த தலைவர் ஒருவர் வற்புறுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தவெக அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி, எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சியைப் பிடிக்கும் இந்த அதிரடித் திட்டம் மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இதற்கிடையில், அரசின் நிலைத்தன்மை குறித்த இந்தத் தகவல்கள் ஆளுங்கட்சி வட்டாரத்திலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் கடுமையான விவாதங்களை உருவாக்கியுள்ளன. பொங்கலுக்குள் ஆட்சியை மாற்றத் திட்டமிடும் இந்த ரகசிய வியூகம் குறித்து தவெக தரப்பில் எந்த மாதிரியான பதிலடி கொடுக்கப்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் கூட்டணி கட்சிகளுக்கிடையேயும், சட்டமன்றக் களத்திலும் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.