“பணம் கொடுத்தாதான் சீட்… ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.2 கோடி”…. வசமாக சிக்கும் தவெக மா.செ.,…. சற்றுமுன் பரபரப்பு புகார்….!

By Nanthini on ஆவணி 27, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சங்கர் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த உரையாடலில், ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்றால் சுமார் ரூ.2 கோடி வரை செலவாகும் என அவர் பேசியதாகத் தெரிகிறது. இந்த ஆடியோவை ஆதாரமாக வைத்து, அவருடன் உரையாடிய பாலசுப்பிரமணியம் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் தவெக கட்சி நிர்வாகி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதேவேளையில், தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை தவெக மாவட்டச் செயலாளர் சங்கர் முற்றிலும் மறுத்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த ஆடியோ பதிவு முற்றிலும் திரிக்கப்பட்டது என்றும், தவறான நோக்கத்தில் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். ஊராட்சி மன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக நிர்வாகி சம்பந்தப்பட்ட இந்தச் சர்ச்சை ஆடியோ விவகாரம் திருப்பூரில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.