எடப்பாடிக்கு பிக் ஷாக்…. தவெக பக்கம் தாவும் 5 அதிமுக MLA-க்கள்?…. செப்.8-ல் வெடிக்கப்போகும் அரசியல் அணுகுண்டு… பரபரப்பில் தமிழக அரசியல்….!

By Nanthini on ஆவணி 27, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவிலிருந்து மேலும் 5 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இருவர் தனித் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், ஏற்கனவே 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து விலகியுள்ள நிலையில், இந்த புதிய விலகல் படலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.