அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் தெலுங்கானாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பயணம் செய்த கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவரான ராகுல், நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் உயர்கல்விக்காக வெறும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகன் உயிரிழந்த செய்தி கேட்டு ராகுலின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். விபத்து குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.
