நீலாம் என்ன டா புருஷன்…! சொந்த மனைவியின் ரகசிய வீடியோவை விற்ற கணவன்… வெளிவந்த அதிர்ச்சி பின்னணி… அதிர்ந்து போன குடும்பம்…!!

By Gayathri on ஆவணி 26, 2026

Spread the love

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர், தனது மனைவியின் அந்தரங்க வீடியோக்களை ரகசியமாகப் பதிவு செய்து ஆபாச இணையதளங்களில் பதிவேற்றிய குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்தில் வசித்து வந்த இந்தத் தம்பதியினருக்கு இடையே நடந்த தனிப்பட்ட நிகழ்வுகளை, அவர் மனைவியின் அனுமதி இல்லாமல் வீடியோவாக எடுத்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆபாச வலைத்தளங்களுக்கு விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்தபோது, மனைவியின் நண்பர்கள் இணையத்தில் அந்த வீடியோக்களைப் பார்த்து அவருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நபர் தனது மனைவியை வேறு நபர்களுடன் உறவு கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, கணவரைத் திருத்தும் நோக்கில் இந்தத் தம்பதியினர் கேரளாவுக்குத் திரும்பியுள்ளனர். அங்கு அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்ட போதிலும், அவர் திருந்தாமல் தனது மனைவியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

   

இந்தக் கொடுமைகள் மட்டுமின்றி, அந்த நபர் தனது 4 வயது மகளின் கண்முன்பாகவே ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாகவும் மருத்துவமனையில் இருந்தவாறே மனைவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, காவல்துறை அவர் மீது கடுமையான பிரிவுகள் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்தது. மனைவியைத் தாக்கிய பின் தலைமறைவாக இருந்த அந்த நபரை, அவரது செல்போன் டவர் சிக்னல் மூலம் தீவிரமாகத் தேடி கொட்டியம் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.