WWE-யாக மாறிய லோக்கல் ரயில்… நடுவழியில் சரமாரி குத்து… அச்சத்தில் உறைந்த பயணிகள்… வைரலாகும் வீடியோவால் பரபரப்பு…!!

By Gayathri on ஆவணி 26, 2026

Spread the love

மும்பை புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்த இரு பயணிகளுக்கு இடையே ஓடும் ரயிலில் பயங்கர மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் ரயில் பெட்டி ஒன்றில், இருவர் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பை ரயிலில் நடைபெறும் இரண்டாவது வன்முறை சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வைரல் வீடியோவில், ரயிலில் கூட்ட நெரிசலுக்கு நடுவே இரு ஆண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் ஒருவரையொருவர் சரமாரியாக குத்திக் கொள்வதைக் காண முடிகிறது. நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட சக பயணிகள் உடனடியாக தலையிட்டு, சண்டையிட்ட இருவரையும் விலக்கி விட்டனர். இருப்பினும், அவர்கள் தொடர்ந்து ஒருவரையொருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலுக்கான உண்மையான காரணம் என்ன மற்றும் இது எந்த வழித்தடத்தில் நடந்த சம்பவம் என்பது குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

   

இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், பத்லாபூர் – சிஎஸ்எம்டி வழித்தடத்தில் சென்ற ரயிலில் பெண்கள் பெட்டியில் இரு இளம்பெண்கள் முடிபிடி சண்டையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அடுத்தடுத்து நடைபெறும் இத்தகைய வன்முறை சம்பவங்கள் ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளன. இந்த வீடியோ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, சண்டையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணிகளிலும், இதற்கான காரணத்தை விசாரிக்கும் நடவடிக்கைகளிலும் ரயில்வே போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.