அசாம் மாநிலம் ஜோர்ஹாட் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சில நாட்கள் வெளியூருக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களது சொந்த மகனே வீட்டில் இருந்த லாக்கரை உடைத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்து காதலிக்காக செலவு செய்துள்ளார்.
வெளியூர் சென்று வீடு திரும்பிய பெற்றோர், லாக்கர் உடைக்கப்பட்டுப் பொருட்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்துத் தந்தை அளித்த புகாரின் பேரில் ஜோர்ஹாட் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது அவர்களின் சொந்த மகன்தான் என்பது அம்பலமானது. இதையடுத்து போலீசார் அந்த மகனைக் கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரொக்கம் மற்றும் நகைகளைப் பறிமுதல் செய்தனர். பெற்ற மகனே சொந்த வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
