அடடே… “நண்பா நான் இருக்கேன்”… எண்ணெய் முதல் உரம் வரை… இந்தியாவுக்கு ரஷ்யாவின் அதிரடி உத்தரவாதம்… உலக நாடுகளை உலுக்கிய சந்திப்பு…!

By Swetha on ஆவணி 26, 2026

Spread the love

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, அணுசக்தி மற்றும் வர்த்தகப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது குறித்து விளக்கினார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு மற்றும் பிரிக்ஸ் உச்சிமாநாடுகளில் அதிபர் புதினைச் சந்திப்பதை பிரதமர் மோடி ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா-ரஷ்யா இடையேயான பல தசாப்த கால உறவுகளைப் பாராட்டிய அதிபர் புதின், இரு நாட்டு வர்த்தகப் பரிவர்த்தனை இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதற்குப் பிரதமர் மோடியின் தனிப்பட்ட கவனமே காரணம் என்று தெரிவித்தார். மேலும், நெருக்கடியான காலங்களில் இந்தியாவிற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்தார். ஆற்றல் துறை மட்டுமல்லாமல், இந்திய விவசாயிகளுக்குத் தேவையான உர விநியோகத்தை அதிகரிப்பது மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை விரைவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

   

இரு நாடுகளின் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற இந்த ஆக்கப்பூர்வமான சந்திப்பில், அணுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆண்டு திட்டமிட்டபடி பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரிவித்த அதிபர் புதின், வரவிருக்கும் உச்சிமாநாடுகளின் மூலமாக இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுவடையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.