“என்ன சார்… இப்படியா பேசுவீங்க…?” டாக்டரை சரமாரியாக தாக்கிய நோயாளியின் மகன்…. சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிர வைக்கும் காட்சிகள்…!!

By Devi Ramu on ஆவணி 26, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், நோயாளி ஒருவரின் மகன் திடீரென மருத்துவரின் அறைக்குள் புகுந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நோயாளிக்குச் சிகிச்சை அளித்த போது மருத்துவர் பேசிய விதம் சரியில்லை என்று கூறி, ஆத்திரமடைந்த அந்த நபர் மருத்துவரைத் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்தும், அவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் இத்தகைய வன்முறைகள் குறித்தும் மருத்துவச் சமூகத்தினர் மீண்டும் கவலை மற்றும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.