டெல்லி, வசீராபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில், 31 வயதான ரஞ்சித் குமார் என்பவர் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருகிராமில் பணியாற்றி வந்த ரஞ்சித், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் காதலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மரணம் தற்கொலை அல்ல, மாறாக கொலை என்று ரஞ்சித்தின் குடும்பத்தினர் தீவிரமாக குற்றம் சாட்டியுள்ளனர். அந்தப் பெண்ணின் குடும்பத்தினர்தான் ரஞ்சித்தைக் கொன்றுவிட்டு, சடலத்தைத் தொங்கவிட்டுள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் இந்த வழக்கை ஆரம்பத்தில் தற்கொலை கோணத்தில்தான் விசாரித்து வருவதாக குடும்பத்தினர் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/i/status/2092205661635444981
தற்போது இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில் உண்மையான காரணம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
