பரிந்துரை இருந்தால் மட்டுமே சிகிச்சையா…? “3 நாட்களாக ICU படுக்கை கிடைக்காததால் பறிபோன உயிர்….” கதறி அழுத சகோதரி…. வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 25, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழக டிரானா சென்டர் மருத்துவமனையில், தீவிரமான சூழ்நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்குக் கடந்த 3 நாட்களாக அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், உரிய நேரத்தில் ஐசியூ சிகிச்சை கிடைக்காததால் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பால் மனமுடைந்த சகோதரி, மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு பரிந்துரை அல்லது பணம் இருந்தால் மட்டுமே உடனடியாக ஐசியூ படுக்கைகள் ஒதுக்கப்படுவதாகவும், ஏழை எளிய நோயாளிகள் அலட்சியப்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உயிரை காப்பாற்ற வேண்டிய மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியப் போக்கினால் ஒரு இளம் உயிர் பறிபோயுள்ளதாகக் கூறி, இச்சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச அரசு உடனடியாகத் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.