இடைத்தேர்தல் ஆதரவு குறித்து கட்சி மேலிடமே இறுதி முடிவு எடுக்கும் என்ற சிபிஐ மூத்த தலைவர் வீரபாண்டியனின் கருத்து, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அண்மைக் காலமாகவே பயிர்க்கடன் தள்ளுபடி, சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்ந்த விவகாரங்களில் தவெக அரசுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் பகிரங்கமாக முரண்பட்டு வருகின்றன.
இந்நிலையிலும், கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்தக் கருத்து வேறுபாடுகள் தவெக – சிபிஐ இடையிலான பிளவை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என CPI வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
