பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில், நகைக்கடையில் பணியாற்றி வந்த 22 வயது பெண் வாணிஸ்ரீ சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவர் சிமோகா மாவட்டம் சாகர் தாலுகாவைச் சேர்ந்தவர் ஆவார்.
சம்பவத்தன்று இவர் எழுதிய தற்கொலைக் கடிதத்தை அவரது அறையில் இருந்த தோழி கண்டு பிடித்து, பெண்ணின் சகோதரி மற்றும் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். அதன்பின் நடத்திய தேடுதலில் அகரா ஏரியிலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
அந்தக் கடிதத்தில், தனது முன்னாள் கல்லூரி தோழன் அபிஷேக் என்பவர் தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்துத் தொடர்ந்து பிளாக்மெயில் செய்து வந்ததாகவும், மன உளைச்சல் தாங்காமலும் குடும்பத்தின் கௌரவத்தைக் கருதியும் இந்த முடிவை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து எச்.எஸ்.ஆர் லேஅவுட் காவல் துறையினர் அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
