உன்னாவ் பகுதியில் இ-ரிக்ஷா ஒன்றை ஓரமாக நிறுத்துவது அல்லது அகற்றுவது தொடர்பாக, பணியில் இருந்த ஹோம் கார்டு காவலருக்கும் இ-ரிக்ஷா ஓட்டுநருக்கும் இடையே திடீரென காரசாரமான வாக்குவாதம் தொடங்கியது. இந்த தகராறு நடுரோட்டில் தீவிரமடைந்த வேளையில், சம்பவ இடத்திற்கு ரிக்ஷா ஓட்டுநரின் சகோதரிகள் விரைந்து வந்தனர். இதனால் பிரச்சனை மேலும் சூடேறி, காவலருக்கும் ஓட்டுநரின் குடும்பத்தினருக்கும் இடையே மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் கடும் மோதல் வெடித்தது.
அப்போது, ஹோம் கார்டு காவலர் ரிக்ஷா ஓட்டுநரின் சகோதரிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அச்சகோதரிகள், தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் அந்த ஹோம் கார்டு காவலரை பொதுமக்களின் கண்முன்னே சரமாரியாகத் திருப்பித் தாக்கினர். இரு தரப்பினரும் வீதியில் இறங்கி மாறி மாறித் தாங்கிக் கொண்ட இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் மக்கள் கூட்டத்தையும் ஏற்படுத்தியது.
https://twitter.com/ashishpaswan0/status/2091840260108140773/video/1
இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு நிலமையை அமைதிப்படுத்தினர். தொடர்ந்து, பொது இடத்தில் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்தது மற்றும் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக ரஞ்சித், சாரிகா மற்றும் நான்சி ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
