காதல் விவகாரம்..! அவமானத்தால் தவித்த பெற்றோர்… மகனின் காதலால் பறிபோன தாயின் உயிர்… கதறி அழுத குடும்பம்…!!

By Gayathri on ஆவணி 24, 2026

Spread the love

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரனின் மகன் பால்பாண்டிக்கும், வேறொரு பெண்ணுக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இந்த விவகாரம் அறிந்து பெண்ணின் பெற்றோர் கண்டித்ததால், மனமுடைந்த அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள், இந்த உயிரிழப்புக்கு பால்பாண்டிதான் காரணம் எனக் கூறி பாண்டீஸ்வரன் வீட்டிற்குச் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தகராறால் மிகுந்த அவமானமும் மன உளைச்சலும் அடைந்த பாண்டீஸ்வரன், தனது மனைவி நாகலட்சுமி மற்றும் மகள் யோகலட்சுமி ஆகியோருடன் இணைந்து அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனைவி நாகலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது பாண்டீஸ்வரனுக்கும் அவரது மகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.