பெண்களே உஷார்..! பழகிய நண்பனே எமனாக மாறிய சோகம்… ஆபாசப் படங்களை காட்டி மிரட்டிய வாலிபர்… இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…!!

By Gayathri on ஆவணி 24, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெலாமக்கியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் வாணிஸ்ரீ, பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கல்லூரி காலத்தில் இவருடன் படித்த அபிஷேக் என்ற இளைஞர், தனது காதலை வாணிஸ்ரீ ஏற்க மறுத்ததால் தொடர்ந்து அவரைத் தொந்தரவு செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், வாணிஸ்ரீயின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து, தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டத் தொடங்கியுள்ளார். காவல் துறையில் புகாரளிப்பேன் என வாணிஸ்ரீ எச்சரித்தும், அந்த நபர் சமூக வலைதளங்களில் அப்புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாகத் தொடர்ந்து மிரட்டி அவருக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த தொடர் மிரட்டல்களால் கடுமையான மன வேதனைக்கு ஆளான வாணிஸ்ரீ, தனது தங்கைக்கு ஒரு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு ஏரியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். அந்த கடிதத்தில், தனது மரணத்திற்கு அபிஷேக் அளித்த குடைச்சல்களே காரணம் எனவும், தனது குடும்பத்தின் மீதான பாசத்தைக் குறிப்பிட்டு குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். தகவலறிந்து உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தற்போது தலைமறைவாக உள்ள அபிஷேக்கைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.