“நான் பார்த்தது இவரை இல்லை…” பல மாதங்கள் பேசி திருமணம் அன்று மணப்பெண் கொடுத்த டுவிஸ்ட்…. கடைசியில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 23, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலம் ஃபிரோஜ்பூர் பகுதியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணப்பெண்ணிற்கு நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் சில மாதங்களாகப் போனில் காதல் பேசி பழகி வந்துள்ளார். திருமண நாளன்று மிகக் கோலாகலமாக மாப்பிள்ளை வீட்டார் ஊர்வலமாக வந்து இறங்கினர். ஆனால், திருமண மண்டபத்தில் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, மணப்பெண் மாப்பிள்ளையின் முகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தான் போனில் பார்த்துப் பேசிய நபரும், மணமேடையில் இருக்கும் நபரும் வேறு வேறு என நினைத்து, சடங்குகளைப் பாதியிலேயே நிறுத்தித் திருமணத்தை மறுத்தார்.

விசாரணையில், மாப்பிள்ளை தனது புகைப்படங்களை மணப்பெண்ணிற்கு அனுப்பியபோது அதிகப்படியான பியூட்டி ஃபில்டர்களை பயன்படுத்தி அனுப்பியிருந்தது தெரியவந்தது. “இது எனது வாழ்க்கை பிரச்சனை, போட்டோவில் இருந்தது போல் நேரில் இல்லாத நபரைத் திருமணம் செய்ய முடியாது” என மணப்பெண் உறுதியாகக் கூறியதால், திருமணம் நிறுத்தப்பட்டு மணமகன் வீட்டார் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.