“சொத்தை அடைய காதலனின் பிளான்…?” நிச்சயமான திருமணம்….! காதலன் அறையில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

By Devi Ramu on ஆவணி 23, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியில் எம்.எஸ்.சி படித்து வந்த ஸ்ரேயா உபத்யாயா என்ற மாணவி, வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்ற நிலையில் மர்மமான முறையில் மாயமானார். குடும்பத்தினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரது காதலனான விவேக் சௌபே என்பவரின் அறையிலிருந்து ஸ்ரேயா கழுத்தறுக்கப்பட்டுப் பிணமாக மீட்கப்பட்டார்.

விசாரணையில், விவேக் சௌபே வரவிருக்கும் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. துணி வியாபாரியின் ஒரே மகளான ஸ்ரேயாவைத் திருமணம் செய்து அவரது குடும்பச் சொத்துக்களை அடைய விவேக் திட்டமிட்டதாகவும், ஆனால் ஸ்ரேயாவுக்கு வரும் நவம்பர் மாதம் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த விவேக் அவரைக் கொடூரமாகக் கொலை செய்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.