உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு குடியிருப்பு அடுக்ககத்தில், பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய 8 வயது சிறுமி ஒருவர் எதிர்பாராதவிதமாக லிஃப்டில் சிக்கிக்கொண்டார். சுமார் 15 நிமிடங்கள் வரை அந்தச் சிறுமி லிஃப்டிற்குள் தனியாகப் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பாதுகாப்பு ஊழியர், சாவியைக் கொண்டு லிஃப்ட் கதவைத் திறக்க முயன்றும் அது பலனளிக்கவில்லை. ஆனால், அச்சமடையாமல் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட அந்தச் சிறுமி, தனது சொந்தக் கைகளாலேயே லிஃப்ட் கதவை பலமாக இழுத்துத் திறந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ளார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, அச்சிறுமி காட்டிய துணிச்சலையும் சமயோசித புத்தியையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
