ஹரியானாவில் கணவரைக் கொடூரமாகக் குத்திக் கொன்றுவிட்டு, தப்பியோட முயன்ற பெண் கூரையிலிருந்து குதித்து காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கணவரின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தீவிர காயமடைந்த அப்பெண்ணிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் மற்றும் குற்றவியல் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகள் அதிகளவில் வெளிவருகின்றன. இவற்றில் காட்டப்படும் மிகக் கொடூரமான கொலை முறைகளும், ஆதாரங்களை அழிக்கும் வழிகளும், பலரின் மனநிலையில் விபரீதமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக உளவியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், சோஷியல் மீடியா மற்றும் இணையதளங்களில் குற்றச் செயல்கள் பற்றிய விவரங்கள் மிக எளிதாகக் கிடைப்பதும் இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. எத்தகைய சூழலிலும் சகிப்புத்தன்மையின்மை, கட்டுப்பாடற்ற கோபம் மற்றும் குடும்பப் பிரச்சினைகளைக் கையாளத் தெரியாத மனநிலை ஆகியவை, இதுபோன்ற கொடூரமான குற்றங்களை நோக்கி நபர்களைத் தள்ளுகின்றன.
