10-ஆம் வகுப்பில் 92% மதிப்பெண் பெற்று, எதிர்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு படித்த 18 வயதான குணால் சந்வாடே, ஐபோன் EMI செலுத்த முடியாத தகராறில் தனது குடும்பத்தோடு மலை உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. ஆரம்பத்தில் குணால் ஐபோன் கேட்டுப் பெற்றோரைக் வற்புறுத்தியதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவரிடம் ஏற்கனவே ஐபோன் இருந்ததாகவும், அதன் இ.எம்.ஐ மற்றும் பணச் சிக்கல் காரணமான கடுமையான மன அழுத்தத்திலுமே இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டதாகவும் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
“குழந்தைகளிடம் மதிப்பெண்களை மட்டுமே கேட்கும் சமூகமாக இல்லாமல், அவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும் கேட்டறிய வேண்டும். எந்தப் பிரச்சனை என்றாலும் ஒன்றாகச் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையைப் பெற்றோர் அளிக்க வேண்டும்” என இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு கருத்துக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.
