“200 ரெஸ்யூம் அனுப்பினாலும் நோ ரிப்ளை..!இன்ஸ்டாகிராமில் கொந்தளித்த பெண்… ஐடி & கார்ப்பரேட் ஊழியர்களுக்கு விடுத்த பகீர் எச்சரிக்கை…!!

By Gayathri on ஆவணி 22, 2026

Spread the love

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், மிருதுல் குப்தா என்ற பெண் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்று பேசுபொருளாகி உள்ளது. தாங்கள் செய்து வரும் வேலையை வெறுக்கும் நபர்களுக்கான ஒரு யதார்த்தமான விழிப்புணர்வை அவர் இதில் பதிவு செய்துள்ளார். தற்போதைய பொருளாதார மந்தநிலை மற்றும் கடுமையான வேலைவாய்ப்பு சூழலில், கைவசம் ஒரு வேலை இருப்பதே பெரிய விஷயம் என்பதை உணர்ந்து, அதற்காக மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய வேலைவாய்ப்பு சந்தையின் நிலைமை எவ்வளவு சவாலாக உள்ளது என்பதையும் அவர் விளக்கியுள்ளார். பல்வேறு முன்னணி நிறுவனங்களில் ஆட்குறைப்பு மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், வேலை தேடுபவர்கள் தினமும் 50 முதல் 200 விண்ணப்பங்கள் வரை அனுப்பினாலும் நிறுவனங்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைப்பதில்லை. மேலும், பல வருட முன் அனுபவம் கொண்டவர்கள் கூட, அடிப்படை பணிகளுக்கான நேர்காணல்களில் நிராகரிக்கப்படும் அவல நிலை நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

ஒருவர் தான் பார்க்கும் வேலையை பிடிக்காமல் வெறுப்பது சாதாரணமான ஒன்றுதான்; ஆனால், தினமும் வேலைக்குச் செல்வதை நினைத்து சலித்துக்கொள்வதற்கு முன்பு, ஒரு வேலைக்காக மின்னஞ்சலைப் பார்த்துக்கொண்டு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான நபர்களின் போராட்டத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சவாலான காலக்கட்டத்தில் நிலையான வருமானத்துடன் ஒரு வேலை இருப்பதே ஒரு பாக்கியம் என்ற அவரது கருத்தை, பல இணையவாசிகளும் ஆதரித்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.