திமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்படி, திமுகவின் உட்கட்சிப் பதவிகளுக்கு உச்சபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு, கிளைச் செயலாளர்களுக்கு 45 வயதும், ஒன்றியச் செயலாளர்களுக்கு 60 வயதும், மாவட்டச் செயலாளர்களுக்கு 70 வயதும் அதிகபட்ச வரம்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் களப்பணியை விரைவுபடுத்தவும் நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தவும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
