ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்…. விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை…. சிக்கிய செந்தில் பாலாஜி?…. சற்றுமுன் பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 22, 2026

Spread the love

டாஸ்மாக் நிறுவனத்தின் டெண்டர், மதுபான கொள்முதல் மற்றும் பார் உரிமம் வழங்குவதில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு முன்வைத்தது. இதன் தொடர்ச்சியாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் இல்லம், டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் மதுபான ஆலைகள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விடிய விடிய அதிரடி சோதனைகளை மேற்கொண்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இந்தச் சோதனைகளின் போது, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த செந்தில் பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தி, வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக மேலும் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு அவர் விசாரணைக்காக அதிகாரிகளின் முன் ஆஜராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.