கடந்த 2003-ஆம் ஆண்டு போஸ்னியாவில் அமைதிப்படை அதிகாரியாக பணியாற்றிய பிரிட்டன் ராணுவ வீரர் வெய்ன் இங்க்ராம் பிறப்பிலேயே முகச் சீர்குலைவு மற்றும் மூச்சுத்திணறல் கோளாறால் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் சாவிக் என்ற 4 வயது சிறுவனைச் சந்தித்தார். தன் சொந்தக் குழந்தையைப்போல் எண்ணிய வெய்ன், அச்சிறுவனுக்கு மறுவாழ்வு அளிக்க முடிவெடுத்துத் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கினார். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு பெரும் தொகையைத் திரட்டி, லண்டனில் உள்ள கிராண்ட் ஓர்மாண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் 12 மணி நேரக் கடினமான அறுவை சிகிச்சையைச் செய்ய வைத்தார்.
சிறுவனின் வளர்ச்சிக்கு ஏற்ப மேலும் பல சிகிச்சைகள் தேவைப்பட்டதால், அடுத்த 13 ஆண்டுகள் தொடர்ந்து நிதி திரட்டி மொத்தம் 5 பெரிய அறுவை சிகிச்சைகளைச் செய்ய உதவி புரிந்தார். 2016-இல் இறுதி சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்து, அந்தச் சிறுவன் தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறான். ஒரு போர்க்களத்தில் சிறுவனுக்கு அளித்த வாக்கை 13 ஆண்டுகள் தொடர்ந்து காப்பாற்றிய வெய்னின் இந்த மனிதநேயச் செயல் உலகெங்கிலும் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
