ஐயோ கொடுமையே… ஐபோன் கேட்டு பிடிவாதம் பிடித்த மகன்… காப்பாற்ற முயன்ற பெற்றோர் உட்பட… 3 பேர் மலையிலிருந்து விழுந்து பரிதாப பலி… மகாராஷ்டிராவில் பெருஞ்சோகம்…!

By Swetha on ஆவணி 22, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில், செல்போன் வாங்கித் தருவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக 19 வயது வாலிபர் மற்றும் அவரது பெற்றோர் மலையிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியைச் சேர்ந்த குணால் சந்த்குடே (19) என்ற வாலிபர், ஐபோன் வாங்கித் தருமாறு வீட்டில் கோரிக்கை விடுத்துள்ளார். பெற்றோர் மறுத்ததால் எழுந்த தகராறில், குணால் கோபமடைந்து அருகில் உள்ள மலைப்பகுதிக்குச் சென்று குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் அவனைத் தடுக்க முயற்சி செய்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

   

https://twitter.com/HateDetectors/status/2090764930442215871/video/1

   

அப்போது பெற்றோர் அவனைச் சமாதானப்படுத்த முயன்றபோது, குணால் திடீரென மலையிலிருந்து கீழே குதித்தான். அவனைப் பிடிக்க முயன்ற தந்தை முரளிதர் (48) தடுமாறி மலையிலிருந்து கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சங்கீதாவும் மலையிலிருந்து கீழே குதித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.