அடச்சீ… நான் உன்னைத்தான் திருமணம் செய்துகொள்வேன்… காதல் வலையில் வீழ்த்தி… சத்தியம் செய்து மாணவியை சீரழித்த… சப்-இன்ஸ்பெக்டரின் கொடூர லீலை… கொந்தளித்த நெட்டிசென்கள்… உத்தரபிரதேசத்தில் பரபரப்பு…

By Swetha on ஆவணி 21, 2026

Spread the love

மீரட் மாவட்டம் உத்தரபிரதேசத்தில், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தினமும் தன் பைக்கில் காவல் சாவடிக்குச் செல்லும்போது மாணவி ஒருவரைச் சந்தித்தார். நாளடைவில் அவருக்கு லிஃப்ட் கொடுக்கத் தொடங்கி, அந்தப் பெண்ணின் மீது காதலில் விழுந்தார். “உன்னைத்தான் திருமணம் செய்துகொள்வேன்” என்று சத்தியம் செய்து, அவரோடு பல்வேறு ஹோட்டல்களுக்குச் சென்று தனது ஆசைகளைத் தீர்த்துக் கொண்டார்.

சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணின் மீதிருந்த ஈர்ப்பு குறையவே, சப்-இன்ஸ்பெக்டர் அவரது தொலைபேசி எண்ணைத் தடை செய்து பேசுவதையே நிறுத்திவிட்டார். இதனால் ஏமாற்றமடைந்த அந்த மாணவி, உடனடியாக எஸ்பி அலுவலகத்திற்குச் சென்று, திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக அந்த அதிகாரி மீது பிரிவு 376-ன் கீழ் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்தார்.

   

இந்த புகாரைத் தொடர்ந்து, தலைமறைவான அந்த சப்-இன்ஸ்பெக்டரைப் பிடிக்க எஸ்பி உடனடியாக மூன்று சிறப்புப் படைகளை அமைத்தார். காதலிக்கு தினமும் பைக் லிஃப்ட் கொடுத்த அந்த அதிகாரியை, இப்போது சிறைக்கு “லிஃப்ட்” கொடுத்து அழைத்துச் செல்ல சக போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.