இன்று முதல் அதிரடி வேட்டை… RTO சோதனையில் சிக்கினால் 3 மாதம் சஸ்பெண்ட்… மகாராஷ்டிரா அரசின் பகீர் உத்தரவு…!!

By Gayathri on ஆவணி 21, 2026

Spread the love

மகாராஷ்டிராவின் அதிகாரப்பூர்வ மொழி மராத்தியாக இருந்தாலும், தலைநகர் மும்பை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கணிசமான அளவில் இந்தி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய பன்மொழிச் சூழலிலும், அங்கு வாடகைக்கு வாகனங்களை இயக்கும் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் இந்தியைப் பயன்படுத்தாமல் கட்டாயமாக மராத்தியில்தான் பேச வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு வலுவாக எழுந்து வருகிறது. குறிப்பாக, தேவேந்திர பட்னாவிஸ் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணி அரசில் உள்ளூர் மொழி குறித்த இந்த நிலைப்பாடு தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மராத்தி மொழி பேசத் தெரியாத ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்காக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்தும் சிறப்புச் சோதனையில் மராத்தி மொழியைக் கையாளத் தெரியாமல் சிக்கும் ஓட்டுநர்களுக்கு முதற்கட்டமாக நோட்டீஸ் வழங்கப்பட்டு, மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும். அந்த கெடுவுக்குள்ளும் அவர்கள் மராத்தியைக் கற்கத் தவறினால், அவர்களது ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் எனத் திட்டவட்டமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.