“பாவம் அந்த வாயில்லா ஜீவன்…” இரவு முழுவதும் போராட்டம்… வாகனத்திற்கு அடியில் சிக்கி தவித்த நாய்… அதிகாரிகளின் அலட்சியம்…. கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஆவணி 20, 2026

Spread the love

ஹைதராபாத் நகரின் பஞ்சாரா ஹில்ஸ் ரோட் எண் 10-இல் உள்ள ஐபிஎஸ் குடியிருப்புகள் அருகே நிறுத்தப்பட்டிருந்த ட்ராலி ஒன்றின் அடியில், எதிர்பாராதவிதமாக நாய் ஒன்று நுழைந்து பலத்த காயங்களுடன் சிக்கிக் கொண்டது. நேற்று இரவு முதல் அந்த நாய் வெளியே வர முடியாமல் பசியிலும் வலியிலும் துடித்துக் கொண்டிருந்தது.

இதனைக் கண்ட ட்ராலி ஓட்டுநர், ஜிஹெச்எம்சி மாநகராட்சியின் நாய்கள் மீட்புக் குழுவிற்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தார். இச்சம்பவம் குறித்த தகவலும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, அப் பகுதியில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்களும் பொதுமக்களும் நாயை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.