ஐயோ கொடுமையே… போலீஸ் கையைப் பிடிச்சுத் தள்ளிய மாணவன்… நடுரோட்டில் கொடூரத் தாக்குதல்… நெஞ்சை உலுக்கும் பாலிடெக்னிக் மாணவர்களின் போராட்டம்… தெலங்கானாவில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 20, 2026

Spread the love

மஹபூபாபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பாலிடெக்னிக் மாணவர்கள் இருவரின் தொண்டையைப் பிடித்துக் தள்ளியதாக நகர ஆய்வாளர் ரகுபதி ரெட்டி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநில அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி மையங்களுடன் இணைக்க உத்தேசித்துள்ளதற்கு எதிராக மாணவர்கள் திரண்டனர். அப்போது காவல்துறைக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அதிகாரி மாணவர்களின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா அரசு ஜூலை 3-ஆம் தேதி வெளியிட்ட அரசாணை 97-ன் கீழ், தொழிலாளர் மற்றும் பயிற்சித் துறையை ‘சக்தி’ எனப் பெயர் மாற்றி, பாலிடெக்னிக் கல்லூரிகளை ‘யங் இந்தியா ஸ்கில் யுனிவர்சிட்டி’ கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலம் முழுவதும் பாலிடெக்னிக் மாணவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். ராமந்தபூர் மற்றும் மூசி டேங்க் பண்ட் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற இந்த போராட்டங்களால் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

   

https://twitter.com/i/status/2090333333742105013

   

இந்த இணைப்பினால், டிப்ளமோ முடித்த மாணவர்கள் நேரடியாகப் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேர உதவும் ECET வாய்ப்பு பாதிக்கப்படும் என்று மாணவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த அரசாணையால் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படித்த மாணவர்கள் BTech சேருவதற்கு மீண்டும் இடைநிலைச் சான்றிதழ் நிலைக் கல்வியை மீண்டும் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும், இது தங்களின் மூன்றாண்டு உழைப்பைப் பாழாக்கிவிடும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.