சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதிர்ச்சி வீடியோ ஒன்று காண்போரின் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. சாலையில் சென்ற கார் ஒன்றின் அருகில் வந்த ஏழைச் சிறுவன் ஒருவன், சாப்பிடுவதற்காகச் சில நாணயங்களைப் பிச்சை கேட்டுள்ளான். பணத்தைக் கொடுக்க விருப்பமில்லை என்றால் கொடுக்காமல் அமைதியாகச் சென்றிருக்கலாம். ஆனால், அந்த காரில் இருந்த நபர் சிறிதும் மனிதநேயமின்றி, காரின் கண்ணாடியை வேகமா ஏற்றி அச் சிறுவனின் கையை அதன் உள்ளேயே வைத்து நசுக்கியுள்ளார். இதில் கை சிக்கிக் கொண்ட சிறுவன் தாங்க முடியாத வலியால் “அப்பா என்னைக் காப்பாத்துப்பா” என அலறித் துடித்துக் கதறியுள்ளான்.
அங்குச் சென்ற பொதுமக்கள் இதைக் கண்டு உடனடியாக ஓடிவந்து காரை நிறுத்தச் செய்து சிறுவனின் கையை மீட்டுள்ளனர். பொதுமக்கள் சரியான நேரத்தில் வந்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த காரோட்டியைக் கண்டறிந்து காவல் துறையினர் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கொந்தளிப்புடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
