“மொத்தம் ரூ.5 லட்சம்… பில் கட்டாமல் தகராறு…” நைட்கிளப்பை சூறையாடிய ரவுடி கும்பல்…. பிரபல மாலில் நள்ளிரவில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 20, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தின் வைஷாலி செக்டார்-3 இல் உள்ள ‘சிக்னேச்சர் மாலில்’ இயங்கி வரும் பிரபல நைட்கிளப்பில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 20 முதல் 30 பேர் கொண்ட கும்பல் புகுந்து பயங்கர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. நைட்கிளப்பின் மேனேஜர், பவுன்சர்கள் மற்றும் பணியாளர்களை அந்த கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது.

லோனி பகுதியைச் சேர்ந்த சமீர் மற்றும் சுஹான் ஆகியோர் முன்பும் இந்நைட்கிளப்பிற்கு வந்து பில் கட்டாமல் சென்றதாகவும், அது தொடர்பாகக் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் கிளப் மேனேஜர் தெரிவித்துள்ளார். மேலும், அக்கும்பல் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அங்கிருந்த ரூ. 5 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் முழுமையாக அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், காசாம்பி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.