மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்திற்கு நபர் ஒருவர் நாய் உடையும், நாய் முகமூடியும் அணிந்து வந்து வினோதமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் தெருநாய்களின் தொல்லைக்கு எதிராக இவர் போராட்டம் நடத்துவதாகத் தகவல் வெளியான நிலையில், நாய்களுக்குக் கருத்தடை செய்யும் டெண்டர்களில் நடைபெற்றுள்ள ஊழல்களை அம்பலப்படுத்தவே அவர் இந்த வினோத போராட்டத்தைக் கையிலெடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சியர் அலுவலகத்திற்கு நாய் வேடமிட்டு வந்த நபரைப் பார்த்து அங்கிருந்த அதிகாரிகளும் பொதுமக்களும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருவதுடன், போராட்டத்தின் பின்னணி குறித்தும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் இணையவாசிகளிடையே காரசார விவாதம் எழுந்துள்ளது.
