யாரும் நினைக்கல!.. “காணாமல் போன சிறுமி”… ஓடை மரத்தடியில் கிடந்த உடல்… அடுத்த சில மணி நேரத்தில் அம்பலமான கொடூரம்… கொதித்தெழுந்த கிராம மக்கள்…!!

By Gayathri on ஆவணி 19, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில், கூலித் தொழிலாளியின் 9 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்காம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமி, உடல்நலக்குறைவு காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்தி, பக்கத்து வீட்டைச் சேர்ந்த 25 வயதான சாஹில் கைரே என்ற இளைஞர் இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கலாம் என காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெற்றோர் வேலை முடிந்து திரும்பிய பின்பு சிறுமியைக் காணாததால் பதற்றமடைந்த குடும்பத்தினரும் ஊர்மக்களும் பல மணி நேரம் தேடியுள்ளனர். எங்கும் சிறுமி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், அப்பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் சைக்கிளில் செல்வது கண்டறியப்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், அவர் அளித்த தகவலின் பேரில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு ஓடையின் அருகே மரத்தடியிலிருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

   

இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டித்து, சிறுமியின் உறவினர்களும் கிராம மக்களும் புனே-நாசிக் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும், இந்த வழக்கில் விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் முக்கிய ஆதாரங்களைச் சேகரித்துள்ள நிலையில், உடற்கூராய்வு மற்றும் தடயவியல் அறிக்கைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.