ஐயோ… காப்பாத்துங்க… உள்ளே என் குழந்தை துடிக்குறான்… ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்… நள்ளிரவில் போராடும் மீட்புக் படை… மகாராஷ்டிராவில் பதற்றம்…!

By Swetha on ஆவணி 19, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் பர்பணி மாவட்டம் கௌசாடி கிராமப் பகுதியில் உள்ள ஒரு வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் அட்னான் ஷேக் நதீம் ஷேக் எதிர்பாராதவிதமாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தான். இந்தத் தகவல் அப்பகுதியில் பரவியதைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் திரளாகச் சம்பவ இடத்தில் திரண்டனர்.

சம்பவம் குறித்து உடனடியாகக் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் விரைவாகத் தொடங்கப்பட்ட நிலையில், மீட்புப் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தப் பர்பணி மாவட்டக் பொறுப்பு அமைச்சர் மேகனா போர்டிகர் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

   

https://twitter.com/nextminutenews7/status/2090019489207439398/video/1

   

குழந்தையைப் பத்திரமாக மீட்கும் நோக்கில், அருகிலுள்ள நாந்தேட் மாவட்டத்தில் இருந்தும் சிறப்பு மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளும் மீட்புக் குழுவினரும் இணைந்து ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.