ரஷ்ய மாடலும் நடிகையுமான இரினா ருடகோவா, மும்பையின் லோகந்த்வாலா சந்தையில் 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட பானி பூரியின் விலை அதிகம் என முன்பு விமர்சித்திருந்தார். ஆனால், சமீபத்தில் துபாய் விமான நிலையத்தில் 42 திர்ஹம்ஸ் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,096) விலையில் பானி பூரி விற்கப்படுவதைக் கண்டு தனது கருத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டுள்ளார். துபாய் விலையோடு ஒப்பிடும்போது மும்பையின் பானி பூரி விலை மிகவும் மலிவானது என்பதை உணர்ந்த அவர், மும்பையில் விலை அதிகம் என்று கூறியது தவறு என நகைச்சுவையாக ஒப்புக்கொண்டதுடன், மீண்டும் மும்பைக்கே திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய இரினா, ‘ரியாலிட்டி கியூன்ஸ் ஆஃப் தி ஜங்கிள்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் மற்றும் பிக்பாஸ் மராத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்று மக்களிடையே பிரபலமானவர். மும்பை பானி பூரியின் சுவையைத் தொடக்கம் முதலே பெரிதும் ரசித்து வந்த இவரது இந்த சுவாரஸ்யமான ஒப்பீடும், பதிவும் தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
